2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கண்டுகொள்ளப்படாத பணிப்புறக்கணிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, கரைச்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அதிகாரிகள் கவனத்தில் எடுக்காது உள்ளனர் என பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் இன்று திங்கட்கிழமை  தெரிவித்தனர்.

இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ஆம் திகதி தொடக்கம் தாங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் கூறினர்.

கூட்டுறவு கிளைகளிலுள்ள உணவுப் பொருட்கள் பழுதடையக் கூடிய நிலைமையில் காணப்படுகின்றது. எனவே, தங்களுடைய கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற கூட்டுறவு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென அந்தப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரைச்சி கிழக்கு ப.நோ.கூ. சங்கத்தின் சகல கிளைகளும் மூடப்பட்டு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தங்களுக்கு வழங்க வேண்டிய 11 மாதகால சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு கோரியும் 25 மாதங்களாக தங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட ஊழியர் சேமஇலாப நிதி பங்களிப்புத் தொகையை நிதியத்துக்கு அனுப்பாமல் தொடர்ந்தும் தலைமை அலுவலகத்தில் வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X