2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கணவன், மனைவி தீக்குளிப்பு : மனைவி உயிரிழப்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன், செல்வநாயகம் கபிலன்

மனைவி தீக்குளித்த போது, அத்தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த கணவனும் தீயில் எரிந்த பின்னர், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக யாழப்பாணம் போதான வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்;ந்த யோசப் அன்ரனி மரியம்மா (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் கடந்த 17ஆம் திகதி வீட்டுக்கு சென்ற கணவன், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதன்போது, மனைவி தீக்குளித்துள்ளார். மனைவியை காப்பாற்ற முயற்சி செய்த கணவன் மீதும் தீ பரவியுள்ளது.

ஆபத்தான நிலையில் இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மனைவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கணவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விருவருக்கும் 3 பிள்ளைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X