2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘கதறியழுத முதியவர், முதியோர் இல்லத்தில் இணைந்தார்’

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவினர்கள் கைவிட்டு விட்டார்கள் என கைதடி முதியோர் இல்லத்தின் முன்பாக நின்று கதறியழுத முதியவரை நேற்று (19)  முதியோர் இல்லத்தினர் இல்லத்தில் இணைத்து உள்ளனர்.

வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை இராஜகோபால் (வயது 85) என்பவரே இவ்வாறு முதியோர் இல்லத்தில் இணைந்துள்ளார்.

கடந்த ஏழு வருட காலமாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்ததாகவும், தற்போது உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளமையால் தொடர்ந்து தனிமையில் வசிக்க முடியாத காரணத்தால் இங்கு வந்ததாக முதியவர் தெரிவித்து உள்ளார்.

அதேவேளை முதியவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை இல்லத்தில் இணைத்துக்கொண்டதாகவும், அவரது மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வசதியாக அவரின் உறவினர்களை இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X