2025 மே 15, வியாழக்கிழமை

கதிர்காமத்தை நோக்கி புனித திருத்தல தரிசன யாத்திரை

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிகளின் ஆலோசனைக்கமைய ஏற்பாடு ​செய்யப்பட்டுள்ள கதிர்காமத்தை நோக்கிய புனித திருத்தல தரிசன யாத்திரை, நல்லூர்க் கந்தசுவாமி கோவிலிலிருந்து, செவ்வாய்க்கிழமை (03) காலை 07 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

நாட்டில், நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையேயான பேதங்கள் நீங்கி, ஒற்றுமை வளர இறையருள் வேண்டியே, இந்தத் தரிசன யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூரில் இருந்து ஆரம்பமாகும் இந்தயாத்திரை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் புராதான கோவில்களைத் தரிசித்தவாறு கதிர்காமத்தைச் சென்றடையும்.

குறித்த யாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியவர்கள், சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலாசார உடையணிந்து வருகை தர வேண்டுமென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தடன், மதுபானம், புகைத்தல், மாமிசம் உண்ணல், வெற்றிலை பாவித்தல், நீர் நிலைகள், அருவிகளில் நீராடுதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாத்திரையில் இணைய விரும்பும் அடியவர்கள், நாளைக்குள் (30) 077-9236552 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .