2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கன்சாட்டில் இருந்து நீக்கப்படுபவற்றை செய்தியாக்க வேண்டாம்

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்படுகின்றது என கூறப்பட்டால், அவற்றை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டார்.

மேலும், உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தானது, மாகாண சபையின் பதிவுப் புத்தகமான கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் அவை செய்தியாக வருகின்றன. இதனால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

ஆகவே, இச் செயற்பாட்டை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X