2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கருத்தறியும் அமர்வில்அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்காக நாடளாவிய ரீதியில் கருத்தறியும் விசேட அமர்வு நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், 10ஆம், 11ஆம் திகதிகளில் மன்னாரில் நடைபெறவுள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்களுடைய கருத்துக்களை கேட்டறியும் விசேட அமர்வில் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'10ஆம், 11ஆம் திகதிகளில் மன்னாரில் நடைபெறவுள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்களுடைய கருத்துக்களை கேட்டறியும் விசேட அமர்வில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள், மதகுருமார்கள்,தனி நபர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டியது தார்மீக கடமையும் பொறுப்புமாகும்.

மேலும், நாட்டில் ஆறு தசாப்தத்துக்கு மேற்பட்ட இன முரண்பாட்டை தீர்க்கக் கூடிய வழி வகையை ஏற்படுத்துவதற்கும் தமிழ் மக்கள் தமது சுய நிர்ணயத் தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும் நாட்டில் தனித்துவத்துடனும் சுய கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்துவதற்கும் எம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும். அதற்கு  அனைத்து தரப்பையும் இதில் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X