2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கர்நாடகா விவகாரம்: யாழில் உண்ணாவிரத போராட்டம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.திருச்செந்தூரன்

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இடம்பெறும் பூரண கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று வௌ்ளிக்கிழமை (16), உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பங்கெடுத்து வரும் தமிழக மக்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கு முன்னால், இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X