Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 14 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மரணமடைந்த சம்பவமொன்று, சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பிரகாஸ் (வயது 30) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த குறித்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயிலிருந்து இரத்தம் வடிந்துள்ளது.
இதையடுத்து, சக விளையாட்டு வீரர்களால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago