2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவில் போரால் பாதிக்கப்பட்டு, வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் சுவிஸ் நலிவடைந்தோர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

தண்டுவன், நெடுங்கேசி, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (06) இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தஅமைப்பினால், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோழி வளர்ப்பு, சுயதொழில் முயற்சிக்கான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .