2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கற்றாளை பிடுங்கிய ஐவர் கைது

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 06 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட 5 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த வாரம் கற்றாளை பிடுங்கிய நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியபோது, அதை அவதானித்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் பிடுங்கிய கற்றாளைகளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X