2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கல்வி அபிவிருத்திக்கு 121 மில்லியன் ரூபாய் தேவை

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு 2016ஆம் ஆண்டில் 121.71 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணுக்காய் கல்வி வலயத்தில் 61 பாடசாலைகளும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 54 பாடசாலைகளும் தற்போது இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான பாடசாலைகளில் பௌதீக மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

இந்த பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் 97 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 121.71 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X