2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘கலந்துரையாடல், கலப்படமற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 16 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தமர்வும் கலந்துரையாடலும் அரசியல் கலப்படமற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

‘இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்’ என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (16) மாலை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், குறித்த கருத்தமர்வு குறிப்பிட்ட சில கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிப்பதாகவோ, அல்லது பின்னடையச் செய்வதாகவோ அமையலாம் என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே கருத்தமர்வும் கலந்துரையாடலும் அரசியல் கலப்படமற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .