2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கள் விற்பனை நிலையத்தினை மாற்றவும்

Gavitha   / 2016 நவம்பர் 10 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் ஐயன்கன்குளத்தில் உள்ள கள் விற்பனை நிலையத்ததை, பிறிதொரு இடத்துக்கு மாற்றுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கள் விற்பனை நிலையம், கிராமத்தின் பாடசாலை, மருத்துவமனை, பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு மிக அருகில் இருப்பதன் காரணமாகவே, இதனை வேறொரு இடத்துக்கு மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக கடந்த காலங்களில் துணுக்காய் பிரதேச செயலாளர், பனை அபிவிருத்திச் சபை என்பவற்றுக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த கிராம மக்கள், பொது இடமொன்றிலிருந்து ஒதுக்குப்புறமான இடத்துக்கு இந்தக் கள் விற்பனை நிலையத்தை மாற்றுவதன் மூலம், சமூக வன்முறைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், இளைய தலைமுறையினர் நல்வழியில் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X