2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கள்வர்கள் - உரிமையாளருக்கு இடையில் மோதல்: மூவருக்கு படுகாயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

 

வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு புகுதியில், நேற்று (14) நள்ளிரவு, திருடச் சென்ற குழுவினருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மணற்காட்டில் உள்ள வீட்டொன்றுக்குள் கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர்.

இதன்போது, சத்தம் கேட்டு எழுந்த தாயும் மகனும் கள்வர்களை இணங்கண்டு கள்வர்களை தாக்கியு்ளனர்.

இதில், கள்வன் ஒருவனும், தாயும் மகனும் படகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டாரின் தாக்குதல்களால் தடுமாறிப்போன கள்வர்கள், மயக்கத்தில் வீழ்ந்து கிடந்த சகபாடியைத் தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X