2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

'கழிவுகளை பிரித்தெடுக்கும் சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது'

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

‘யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் நீண்டகாலமாக கழிவுகள் கொட்டப்பட்ட பகுதியில் இருந்து பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை பிரித்தெடுக்கும் சிறப்பு நடவடிக்கை கடந்த 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக’ யாழ்.மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கல்லுண்டாய் பகுதியில் யாழ்.மாநகர சபை மற்றும் சில பிரதேச சபைகளால் நீண்டகாலமாக கழிவுகள் கொட்டப்பட்டன. இந்த கழிவுகள் தரம் பிரிக்கப்படாமலேயே கொட்டப்பட்டுள்ளது. எனவே அவற்றை பிரிக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இதனால் சுமார் 50 தொண்டர்களை கொண்டு சிறப்பு நடவடிக்கை கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கனரக வாகனங்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றி வருகின்றோம்.

கடந்த 8ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 18 ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை மீட்டுள்ளோம்.

மேலும், இனிவரும் காலங்களில் மருத்துவ கழிவுகள் அங்கு கொட்டப்படாது என்பதுடன் மருத்துவ கழிவுகளை யாழ்.மாநகரசபை பொறுப்பேற்கவும் மாட்டாது. இதேபோல் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொறுப்புணர்வுடன் கழிவுகளை தரம் பிரித்து அகற்றவேண்டும்’ என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .