2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மேற்படி ஆசிரியர் சங்கத்தின் வடக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று  பிற்பகல் 1 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது முரண்பாடுகளை நீக்கி, சம்பளத்தை அதிகரிக்கவும், கொள்ளையடித்த 30 மாத நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கவும் மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் ஆசிரியர்களைப் பாதுகாப்போம், கற்பித்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மேலதிக வேலைகளை இரத்துச் செய்யவும், இல்லாமல் செய்த ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் வழங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும், இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X