2025 மே 10, சனிக்கிழமை

காலநிலை மாற்றம்: யாழில் பாதிப்பில்லை

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால், யாழில்  எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென,  அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்துக்குள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என, யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, யாழ். மாவட்டத்தில் கணிசமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை எந்தவித அனர்த்தங்களோ, சேதங்களோ இடம்பெற்றதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு  அறிக்கை கிடைக்கவில்லை. 

அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடிக்கும் என வளிமண்டல திணைக்களத்தினரால் எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரப்படுகிறார்கள். 

அதிலும் கடல் பகுதிகளில் 70 - 80கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடிய நிலை காணப்படுவதால், மீனவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு, வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X