2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கிளி. சிறுபோகத்துக்கு மொனராகலை உரம்

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான சேதன உரம், மொனராகலை மாவட்டத்திலிருந்து  600 லொறிகளில் எடுத்து வரப்படவுள்ளதாக, மாவட்டச் செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கான முன்னேற்பாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நிலப் பண்படுத்தலுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கால தாமத நிலை  காணப்படுகின்றது.

இதனால் விவசாயிகள்  பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், சேதன உரத்தைப் பயன்படுத்தி பயிர்ச் செய்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், மேற்படி உரம் வரவழைக்கப்படவுள்ளது.

அதேவேளை, இவ்வாறு சேதன உரத்தை ஏற்றி வரும் 600 லொறிகளுக்கும்  தலா 250 லிட்டர்  டீசல் வீதம் எரிபொருள் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் மாவட்ட செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X