2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி வளாகத்தில் பகடிவதை; ‘எனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை’

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகடிவதை நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லையென, வடமாகாண ஆளுநர் தெரிவித்தர்.

தனது அலுவலகத்தில், இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி வளாகத்தில் பகடிவதைகள் நடைபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடங்கள் உள்ளனவெனவும் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வேனெனவும், ஆளுநர் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால், குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X