Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லைக் கொடுத்தக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பஸ்தருக்கு எதிராக, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (18) மேலும் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (14) மேலும் சில மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமையவே, அவருக்கு எதிராக மேலும் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த நபருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு வீதியில் வைத்து பாலியல் ரீதியான தொல்லை விளைவித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
குறித்த நபர் யாழ்ப்பாண நகரில் நாட்டாமை வேலை பார்ப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள் கண்டறிந்து அவரை 10ஆம் திகதி கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை கடந்த 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .