2025 மே 16, வெள்ளிக்கிழமை

குடும்பஸ்தர் ​படுகொலை: 10 வருடங்களின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் – காரைநகர், பாலாவோடை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், இருவருக்கு மரணதண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், இன்று (22) தீர்ப்பளித்தார்.

உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே, குடும்பஸ்தர் ​ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில், 4 பெண்கள் உட்பட 9 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகளின் பின்னர், கடந்தாண்டு 9 எதிரிகளுக்கும் எதிராக சட்ட மா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில், ஒக்டோபர் 22ஆம் திகதி, வழக்கு தீர்ப்பு தினமாக குறிப்பிடப்பட்டது.

இதன்போது, இரண்டாம் எதிரி வைத்தியலிங்கம் துஷ்யந்தன், மூன்றாம் எதிரி முருகேசு சந்திரன் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, இருவருக்கும் மரணதண்டனை விதித்து, நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

ஏனையோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .