2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

குதிரைகளைப் பராமரிக்க எவரும் இல்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும்  பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றியுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள குதிரை இனங்களை பாதுகாக்கும் முகமாக,  முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் கழுவொன்று நியமிக்கப்பட்டது.

அக்குழுவினரும், குதிரைகள் குறித்து  ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில், எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லையெ, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக இக்குதிரைகள் தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால்,  அவற்றை வேறிடங்களுக்குக் கொண்டு செல்வது சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X