2025 மே 01, வியாழக்கிழமை

குத்தகை விவகாரத்தில் சந்தைக்கு சேதம்; மூவர் கைது

Editorial   / 2022 ஜனவரி 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முள்ளியவளை தண்ணீரூற்று பொதுச்சந்தைக்கு நேற்று முன்தினம் (24) இரவு வந்த நான்கு பேர் அங்கிருந்த 60 வயது காவலாளியை தாக்கி சந்தைக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

இதில், காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் காவலாளிஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தையை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பில் எழுந்த பிரச்சினையின் விளைவாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

 கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள முள்ளியவளை உப அலுவலகத்திற்கு சொந்தமான பொது சந்தையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முள்ளியவளை உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காவலாளி தாக்கப்பட்டு, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமைக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .