2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குருநகரில் வெடிபொருள் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்,ராஜ்

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நேற்று மாலை குருநகர் பகுதியில் மேற்கொண்டதிடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 1 கிலோ 30 கிராம் வெடிபொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குருநகர் - கொய்யா தோட்டம், பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்து இருப்பது தொடர்பில் கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

இதன் அடிப்படையிலேயே, குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட வெடிபொருள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது இரவில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X