எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் (15) இரவு குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று உள்ளது.
அளவெட்டி மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு 12 மணியளவில் குளியலறை யன்னல் கம்பிகளை வளைத்து 3 கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர்.
மூவரும் தலைக்கவசம் அணிந்து முகத்துக்கு கறுப்பு துணி கட்டி இருந்துள்ளார்கள்.
வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.
தேடுதலின் போது வீட்டில் இருந்த தாலிக்கொடி, சங்கிலி, மோதிரம் என 15 பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி செல்லும் போது மிளகாய் தூளினை வீடு முழுவதும் விசிறி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு வீட்டார் அறிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago