Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 16 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வலி.தெற்கு பிரதேச சபையின் 05 ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில், அப்பகுதி ஈ.பி.டி.பி கட்சியின் வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கூட்டத்தையும் குழப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈவினை தெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி கூட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மண்டபத்துக்குள் நுழைந்த குறித்த ஈ.பி.டி.பி வேட்பாளர் கூட்டத்தை குழப்பும் வகையில் அடாவடித்தனம் புரிந்ததுடன், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் குறித்த மண்டபத்தை விட்டு வெளியேறுமாறு சத்தமிட்டு குழப்பம் விளைவித்துள்ளார்.
இந்நிலையில், மண்டபத்தை விட்டு வெளியேறிய மக்களும் வேட்பாளர்களும் மண்டபத்துக்கு முன்னால் வீதியில் நின்றபடி தொடர்ந்தும் கூட்டத்தினை நடாத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த ஈ.பி.டி.பி வேட்பாளர் தன்னுடைய மோட்டார்சைக்கிளுடன் நடுவீதியில் நின்றபடி கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
15 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago