Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலி.தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்துக்கு கட்சியினால் அ.தவப்பிரகாசம் பரிந்துரைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தி.பிரகாஸ் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவானார்.
அதன் பின்னர் சபையில் தவிசாளர் தெரிவின் போது, அவர் சார்பான தமிழரசு கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட்டார் என அவரை தமிழரசு கட்சியில் இருந்து நீக்கி, அவரது சபை உறுப்பினர் பதவியை வறிதாக்க வேண்டும் என தேர்தல் அலுவலகத்திற்கு தமிழரசு கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் பிரகாஸின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.
அந்நிலையில் பிரகாஸின் வெற்றிடத்திற்கு கட்சியின் நீண்டகால உறுப்பினரான அ.தவப்பிரகாசத்தை தெரிவு செய்து அவரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமிழரசு கட்சியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.
அதேவேளை தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தடை விதிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட நீதிமன்றில் தி.பிரகாஸ் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரிரு தவணைகளில் தனது சொந்த விருப்பின் பேரில் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையிலையே வலி.தெற்கு பிரதேச சபை உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் த.அகிலன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago