Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2018 ஜனவரி 14 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யாழ். முஸ்லிம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக, அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள்” என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு இன்று (14) கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
“எமது மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றேன். ஆனால், எமது வட்டார மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்கள் பசப்பு வார்த்தைகளை கூறி பணம் கொடுத்து திசை திருப்பப் பார்க்கின்றனர்.
“இந்த ஏமாற்று நடவடிக்கைகளை மக்கள் யாவரும் அறிந்து எமது கடந்த கால இன்னல்களை சற்று நினைத்து பார்த்தால் இவர்களது சுயரூபம் தெரியவரும்.
“இது தவிர, யாழ். முஸ்லிம் மக்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கு எமது தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
“எனவே, மக்களாகிய நீங்கள், என்னை எமது கட்சியை ஆதரித்து எமது பிரதேச அபிவிருத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்.
அத்துடன், உங்கள் வாக்குகளை பணத்தால், வாங்கி வெற்றி பெறலாம் என சிலர் நினைக்கின்றார்கள். அவர்கள், சிலருக்கு கூட வட பகுதியில் வாக்குரிமையே கிடையாது.
“இவ்வாறானவர்கள், எப்படி மக்களிடம் சேவை செய்கின்றோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. எனவே, எதிர்வரும் தேர்தலில் எமது வாழ்வுரிமை பறிப்பதற்காக அரசியல் வியாபாரங்களைத் தற்போது செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தக்க பதிலடி மக்கள் வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.
15 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago