2025 மே 15, வியாழக்கிழமை

கேணியில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தொண்டமனாறு - செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில் சடலம் மிதந்துக்கொண்டிருப்பதை அவதானித்து, அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .