Janu / 2024 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பித்துள்ள சம்பவம் தொடர்பில் , CCTVகேமராவில் பதிவாகிய காணொளி ஆதாரத்துடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில், வியாழக்கிழமை (29) அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த CCTV கேமராவில் , நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையையும் மாற்றிச் செல்வது பதிவாகியுள்ளது .

குறித்த CCTV காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதுடன் அதில் பதிவாகியுள்ள நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 0718591337 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலித செனவிரட்ன மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மக்கள் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025