2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடல்

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

'ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறை இருட்டில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படையில் இத்தருணத்திலாவது, அவர்களை விடுவிக்க மனிதாபிமான முறையில் வலியுறுத்தும் வகையில், சர்வமத பிரதிநிதிகளுடன் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் உள்ள சர்வமத பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கமைய, இந்தக் கலந்துரையாடல், யாழ். – நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கட்டளை நிலைய மண்டபத்தில், இன்று (07) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .