2025 மே 05, திங்கட்கிழமை

’கொரோனா தடுப்பூசியைத் தவறவிடாதீர்கள்’

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கொரோனா தடுப்பூசியைத் தவறவிடாது, மக்கள் விரைந்து  பெற்றுக்கொள்ளுமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு, இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் தான் தடுப்பூசி பெற்றப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள சினோஃபார்ம்  தடுப்பூசி, தமது ஆய்வின்படி சிறப்பான தடுப்பூசியாகவே காணப்படுவதாகவும் யாழ். பல்கலைக்கழகத்துக்கு இந்த தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தன் அடிப்படையிலேயே, தமக்கு இந்தத் தடுப்புசி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்தத் தடுப்பூசியை இனிவரும் காலங்களில் பெறுவது மிகவும் கடுமையான விடயமாகுமெனத் தெரிவித்த அவர், எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை யாழ். மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

இதேவேளை, 'சினோஃபார்ம் தடுப்பூசி தொடர்பில் பலவிதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.  இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள் இந்த ஊசியைப் போட்டால் கரு உருவாகாது என்றெல்லாம் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. அந்த விடயத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

'எனினும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏன் போட வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகவும் கூடுதலாக காணப்படும் என்பதனால்தான். ஆனால், அது எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது' எனவும், சற்குணராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X