2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொள்ளை, திருட்டுகளில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ் நகரின் மூன்று இடங்களில், கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உட்பட ஐவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 8  பவுன்  தங்க நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருள்கள் என்பன மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த மூவரடங்கிய  கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

அதேவேளை யாழ்ப்பாணம் மருதடி ஒழுங்கையிலுள்ள பூட்டியிருந்த வீடு உடைக்கப்பட்டு இலத்திரனியல் உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.  
அத்துடன் அரியாலையிலுள்ள கடைகள் இரண்டு உடைக்கப்பட்டு பெறுமதிவாய்ந்தப் பொருட்கள் கொள்ளயிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். 

தடயங்களின் அடிப்படையில் பாசையூர், குருநகர் மற்றும் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் 23 தொடக்கம் 40 வரையிலான மூவர் கைதுசெய்யப்பட்டனர். 

அதேவேளை சந்தேக நபர்கள் மூவரிடமும் நகை மற்றும் பொருள்களை வாங்கிய குற்றச்சாட்டில், மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மேற்படி ஐவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .