2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பிலிருந்து யாழ் சென்ற புகையிரதத்தில் விபத்து

Freelancer   / 2023 ஜூலை 19 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் மாட்டுடன் மோதுண்டதில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது நிறுத்தப்பட்டது.

இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.

பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.

மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரதம் வருகை தந்து குறித்த புகையிரத்தினை எடுத்து சென்றிருந்தது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .