2025 மே 16, வெள்ளிக்கிழமை

கோட்டா விஜயம்; யாழ்ப்பாணம், வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், என்.வினோத்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வவுனியாவுக்கு இன்று (28) வருகைதந்த நிலையில்,  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவில் பிரசாரக்கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது, நகர்ப்பகுதியெங்கும் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, யாழ் வீதி - மன்னார் வீதி உட்பட நகருக்குள் நுழையும் பகுதிகளிலும் பாதுகாப்பு தடைகள் போடப்பட்டு வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதேவேளை, பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

யாழ். மாவட்ட செயலகத்துக்கு  அருகில் பிரசார நடவடிக்கைக்காக இன்று மதியம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபாய ராஜபக்ஷ  ஆகியோர் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா்.

இதற்காக யாழ். நகாில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும் உச்ச பாதுகாப்பை வழங்கியிருக்கின்றனா். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .