2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘கோட்டாவுடன் பேசுவதில் என்ன நியாயம்?’

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மஹிந்த, கோட்டாபய ராஜபக்ஷவினர் இன அழிப்பைச் செய்தவர்கள் என்பதால் அவர்களை வெற்றி பெறச் செய்யக் கூடாது என்று கடந்த காலங்கிளில் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இப்போது கோட்டாபய ராஜபக்சவுடன் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறதெனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், இதுவரைக் குழு தாம் சொல்லி வந்த நிலைப்பாடுகளையும் இப்பொழுது எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும் கோரினார்.

யாழ்., கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கோட்டாபயாவை வெல்ல வைப்பதற்கு என சிலர் எம் மீது குற்றஞ்சாட்டுவதாகவும் தேர்தலைப் பகிஷ்கரிப்பதென்ற எங்கள் நிலைப்பாடுகள் நாங்கள் யாரையும் ஆதரிப்பதாக அல்லவெனவும் கூறினார்.

இத்தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கையாகுமெனவும், அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தரப்பில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கோட்டபாய ராஜபக்ஷவுடன் பேச இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. அதாவது கோட்டபாய தரப்பினர் கூட்டமைப்பை சந்திக்க கேட்டு இருந்ததாகவும் ஆனாலும் இனப்பிரச்சனை தீர்வு குறித்து மஹிந்த ராஜபச்ஷவோடு பேசுமாறும் கூறியதாகவும் அதற்கான சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது எனவும், அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறுகின்ற எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்தப் புகோளப் போட்டியை தமிழர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், இவர்களை நிராகரித்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென, தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் நாங்கள் கடந்த காலத்திலிருந்த இதுவரை காலமும் சொல்லி வருவதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .