2025 மே 17, சனிக்கிழமை

‘கோட்டாவை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை பார்த்து தமிழ் மக்கள் பயப்படவில்லையெனத் தெவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அவர் பத்து தலை இராவணன் போல வந்தாலும், தாம் அவரை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பத் தலைவர் அமரர் நடராசா தங்கத்துரையின் 71ஆவது ஜனன தின நிகழ்வு, வல்வெட்டித்துறை - நெற்கொழு விளையாட்டு மைதானத்தில், நேற்று (25) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிவற்றின் தலைவர்கள் அனைவரும், போர்க் குற்றத்துடன் தொடர்புடையவர்களெனவும், ஷவேந்திர சில்வாவை இராணவத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளமையானது, மைத்திரி அரசாங்கம் தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் எதிராக ஒரு போர் பிரகடனத்தை ஏற்படுத்தியுள்ளதை போன்று அமைந்துள்ளதெனவும் குற்றஞ்சாட்டினார்.

தமிழர்களாகிய தாம், தம்மை தாமே ஆளும் அதிகாரம் கிடைக்கும் வரை தாம் ஓயமாட்டோமெனவும், அவர் தெரிவித்தார்.

அந்த அதிகாரம் கிடைக்க மறுக்கப்படும் சூழ்நிலையில், சுதந்திர தனி நாடாக உருவாகவே வழிவகுக்குமெனவும் அதனை தென்னிலங்கை கட்சிகளே முடிவெடுக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .