Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 01 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
'அடிகாயங்களுடன் காணப்பட்ட எனது சகோதரரை, நீதிமன்ற உத்தரவுக்கமைய சிகிச்சை வழங்குவதற்காக காங்கேசன்துறைக்கு கூட்டிச்சென்றவர்கள், அங்கு வைத்து அவர் தப்பியோடிவிட்டதாக, நீதிமன்றத்தில் பொய் கூறினர்' என காணாமற்போன துஷ்யந்தன் என்பவரது சகோதரி, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற சாட்சியப் பதிவின் போது அவர் மேலும் கூறியதாவது,
'2007ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதியன்று மாடு கட்டச்சென்ற எனது சகோதரனை இராணுவம் பிடித்தது. பின்னர், சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தது. புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார், ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சர்;டுக்களின் கீழ், அவரை நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது, சகோதரனின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்டமையால் அவரை சிகிச்சைக்கு உட்படுத்துமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சிகிச்சை அளிப்பதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றவேளையில், சகோதரன் தப்பித்து விட்டதாக சாவகச்சேரி பொலிஸார் வழக்கை முடித்துவிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் நாங்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வழக்கு, மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்றத்திலும், அதே கருத்தை பொலிஸார் சொல்லி வழக்கை முடித்துவிட்டனர்' என அந்தச் சகோதரி தெரிவித்தார்.
26 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
8 hours ago
9 hours ago