2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுகாதாரமற்ற நிலையில் மலசலகூடங்கள்

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் உள்ள மலசலகூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால் தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.

கரைச்சி பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படும் இப்பொதுச்சந்தையில் மலசல கூடங்கள் தூய்மையாக இருப்பதில்லை. மலசல கூடங்களுக்கு முன்னால் இறைச்சிக்கடைகள் காணப்படுகின்றன. இலையான்களின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதால் இறைச்சி, மரக்கறிகள், மீன்கள், உணவகங்களிலுள்ள உணவுகளில் கிருமிகள் தொற்றுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சியில் பஸ் நிலையமோ அல்லது பயணிகளுக்கான மலசலகூடங்களோ அமைக்கப்படவில்லை.

சந்தைக்குள் இருக்கின்ற இந்த மலசல கூடங்களையே கிளிநொச்சி நகருக்கு வருகின்ற மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் சந்தை நிர்வாகம் மலசல கூடங்களை தூய்மையாக வைத்திருப்பதில்லை.

இதனால் தொற்றுநோய்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X