2025 ஜூலை 17, வியாழக்கிழமை

செங்கை ஆழியானின் மறைவு தமிழ் இலக்கித்துறைக்கு பாரிய இழப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 01 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூத்த தமிழ் எழுத்தாளர், நண்பர் செங்கை ஆழியான் - கந்தையா குணராசாவின் மறைந்த செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழ் இலக்கியம் சார்ந்து அவர் ஆற்றியுள்ள பணிகள் எமது வரலாற்றின் ஆவணங்களாகத் திகழ்பவை. 

அவரது பிரிவால் ஏற்பட்டுள்ள இடைவெளி எவராலும் நிரப்ப இயலாதது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

செங்கை ஆழியானின் மறைவையொட்டி செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில், 

2010ஆம் ஆண்டு யாழ்ப்பாண எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் நான் அமைத்த குழுவுக்கு செங்கை ஆழியான் தலைமையேற்றிருந்தார். இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை வழங்கி, யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களது நூல்களை வெளிக்கொண்டுவருமாறு கூறியிருந்தேன். 

இதன்போது அவர் பெரும் உறுதுணையாக இருந்து செயற்பட்டார்.

மிக அதிகமான நூல்களின் ஆசிரியாக விளங்கும் அன்னார், அரிய பல வரலாற்று ஆய்வு நூல்களையும் எமக்குத் தந்துச் சென்றுள்ளார். 

இதில், 'ஈழத்து சிறுகதை வரலாறு' மிகவும் முக்கயத்துவம் வாய்ந்த ஆவணமாகும். இவர் எழுதிய 'வாடைக்காற்று', 'புதினம்' போன்ற படைப்புகள் ஈழத்துத் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

அன்னாரது பிரிவால் துயரும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கிய கர்த்தாக்கள் அனைவருடனும் எனது துயரங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X