Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் பொருட்டு புதிய சிங்கள குடியேற்றங்களும் விகாரைகளும் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கண்டனப்பேரணி ஓன்று எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்துவதற்கு தமிழ்மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது.
புத்தர் சிலை அமைப்பு, விகாரை நிர்மாணிப்பு, இராணுவக்குடியிருப்புக்கள் என தமிழர் வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் இச்செயற்பாடு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வடமாகாணத்திலும் இவ்வாறான செயற்பாடுகிளில் ஈடுபட்டுள்ளமையானது தமிழ் மொழி, கலாசார பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாடென மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், மக்களுக்குத் தேவையானதும் சொந்தமான மக்களின் காணிகளை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருவதில் அரச படைகள் குறியாக உள்ளன, என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் சிங்கள பௌத்த மயமாக்கலினை நிறுத்தக் கோரியும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரியும் இராணுவத்தினரையும் வெளியேற்றுவதற்கான தமிழின அழிப்பிற்கான பொறுப்புக்கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்ய்பட்டோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் கைதிகளை நிபந்தணையின்றி விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் ஒரு சமஷ்டி ஆட்சி உருவாகவும் வேண்டி இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago