2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுடலைக்குள்ளிருந்து சூதாடிய அறுவர் கைது

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை சுருவில் சுடலை மடத்துக்குள்ளிருந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை சனிக்கிழமை (28) கைது செய்ததாக, ஊர்காவற்துறை குற்றப்புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அறுவர் கொண்ட குழுவொன்று பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்போது, சிவில் உடையில் சென்ற குற்றத்தடுப்பு பொலிஸார்,  அறுவரையும் கைது செய்ததுடன், சூதாட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த 13 ஆயிரத்து 500 ரூபாயையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான அறுவரில் ஒருவர், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மற்றைய ஐவரும் வேலணை, புளியங்குடல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள சந்தேக நபர்கள் அனைவரையும், இன்று ஞயிற்றுக்கிழமை (29), ஊர்காவற்துறை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .