2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுண்டிக்குளம் கடல்நீரேரியில் இறால் பிடிக்க அனுமதி

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுண்டிக்குளம் கடல்நீரேரியில் நாளை வெள்ளிக்கிழமை  முதல் மீனவர்களுக்கு, இறால் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் இன்று வியாழக்கிழமை (11) அறிவித்துள்ளது.

சுண்டிக்குளம் கடல்நீரேரியில் இறால் இனப்பெருக்கத்துக்காக அப்பகுதியில் இறால் பிடிப்பதற்கு கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இறால் இனப்பெருக்கக் காலம் தற்போது முடிவடைந்தமையடுத்து, அப்பகுதியில் இறால் மீன்பிடிப்பதற்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 300 சிறுகடல் தொழிலாளர்களும் கிளிநொச்சியைச் சேர்ந்த 1,200 சிறுகடல் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்.

கூடுவலை, வீச்சு வலை, களங்கண்டி ஆகியவற்றை பயன்படுத்தி மீனவர்கள் இறால் பிடியில் ஈடுபடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X