2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுத்தம், சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தவும்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் மாவட்ட சுத்தம், சுகாதாரம் தொடர்பில் காட்டி வரும் அக்கறையின்மை காரணமாக, எமது மக்களிடையே பல்வேறு நோய் தொற்றுக்களை ஏற்படுத்த வழிவகுத்து வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர், குப்பைகள் போன்றன உரிய முறையில் அகற்றப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன.

இதனால், அதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகுகின்றனர்.

எனவே, யாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம், சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும், இதற்கேற்ற வகையில் வட மாகாண சபை தனது ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு வழிகாட்டல்களை வழங்க வேண்டியதும்  அவசியமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X