Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கடந்த வருடம் பெய்த பருவமழை காரணமாக முற்றாக சேதமடைந்த வான், இரண்டு மாதகாலம் ஆகியும் புனரமைக்கப்படாமையால் பெருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வளலாய் பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட இப்பகுதியில் தற்போது, 297 குடும்பங்கள் மீள்குடியேற விரும்பம் தெரிவித்து தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தற்போது 64 குடும்பங்கள் நிரந்தரமாக குடியமர்ந்துள்ளன. ஜே-284 கிராமசேவையாளர் பிரிவான இங்கு மீனவ குடும்பங்களே அதிகமான மீள்குடியேறியுள்ளன.
இவர்களின் வாழ்வாதரமாக மீன்பிடி காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையும் கடல் அலையின் சீற்றமும் காரணமாக அமைக்கப்பட்ட இரண்டு வான்களும் முற்றாக சேதமடைந்துள்ளது.
தற்போது இரண்டு மாதங்கள் ஆகியும் சேதமடைந்த வான்கள் புனரமைப்பின்றி படகுகள் உள்ளே செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் தாம் படகுகளை கடற்கரையில் ஏற்றி வைத்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அப் பகுதி மீனவரான சதானந்தம் உதயசூரியன் கருத்து தெரிவிக்கையில்,
'கடந்த இரண்டு மாதங்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு மீன்பிடிக்க முடியாத நிலை காணப்பட்டது. தற்போது கடல் சீற்றம் குறைந்து மீன்பிடிக்க செல்லலாம் என நினைத்தால் வான் சேதமடைந்துள்ளது. உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பில் தெரிவித்தும், இன்று செய்து தருகிறோம், நாளை செய்து தருகிறோம் என கூறுகிறார்களே தவிர வானை திருத்தி தருவதாக இல்லை.
இதனால் படகுகள் கடலுக்கு செல்ல முடியாமல் இங்குள்ள மீனவர்கள் மாற்றுத்தொழிலை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது இங்குள்ள மக்களே தவிர அதிகாரிகள் இல்லை.
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடாகதான் இங்கு வான்கள் செய்து தரப்பட்டது. எனினும் அமைக்கப்பட்ட வான்கள், உரிய முறையில் அமைக்கப்படவில்லை. கடல் சேறும், கற்களையும் கொண்டே இத் துறைமுகம் அமைக்கப்பட்டது.
அமைக்கப்பட்டு 1 மாதத்தில் துறைமுகம் அழிவடையும் அளவுக்கு காற்றோ, புயலோ இங்கு ஏற்படவில்லை. சாதாரண மழைக்கே வான் சேதமடைந்து விட்டது.
இவ்வாறான நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகினை கொண்டு எவ்வாறு தொழில் செய்யமுடியும்' என குறித்த மீனவர் தெரிவித்தார்.
எனவே,இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்து, தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கு, சேதமடைந்த வானை திருத்தி தருமாறு மீனவவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago