2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

செந்தூரனின் சகோதரிக்கு உதவி

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி, புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரனின் சகோதரிக்கு, மடிக்கணணியும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்காக ஆரம்பகட்ட நிதியுதவியும் இன்று வியாழக்கிழமை (21), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனால் மாணவியின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.

குறித்த மாணவி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே, அவரின் முயற்சியால்  மடிக்கணணியும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான ஆரம்பகட்ட நிதி உதவியாக 31ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவியின் எதிர்கால பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X