2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்ட பாடசாலைக்கு கட்டடம்

George   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

சுனாமியால் பாதிப்படைந்து குறைந்தளவு கட்டட வசதிகளுடன் இயங்கி வருகின்ற மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு 8.6 மில்லியன் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, 21ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டவுள்ளனர்.

இடவசதி குறைந்த இந்தப் பாடசாலைக்கு கட்டடம் கட்டுவதற்கு நிதி தேவையென்பதை கவனத்தில் எடுத்த யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்களால் நிதியுதவி கிடைக்கப்பெற்றது.

இந்த நிதியைக் கொண்டு 110 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இரண்டு மாடிக் கட்டடத் தொகுதி 10 வகுப்பறைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது. சுனாமி பாதிப்பையடுத்து, கடற்கரையிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இந்தக் கட்டடத் தொகுதியானது அமைக்கப்படுகின்றது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ரி.நந்தகுமார், நிதியுதவியில் 70 வீதமான பங்களிப்பை வழங்கிய இங்கிலாந்தில் வாழும் மாணிக்கம் கந்தையா மற்றும் வே.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X