2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சீமெந்து தொழிற்சாலை முன்னாள் பணியாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

George   / 2016 மே 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு மேற்குப் பக்கமாகவுள்ள சூரிய சைவ உணவக கட்டடத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேற்படி, ஒன்றுகூடலுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்களையும் பணியாளர்கள் இல்லாதவிடத்து பணியாளரின் குடும்ப அங்கத்தவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இது தொடர்பில் ஆராய்ந்ததுடன், கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X