2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சீமெந்துப் பக்கெட் விநியோகம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அரசரட்ணம்

யாழ். மாவட்டத்தில் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மானிய விலையில் சீமெந்து பக்கெட் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடுகளைத் திருத்துவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மானியமாக வழங்கப்பட்டு வரும் சீமெந்துப் பக்கெட் விநியோகம் இந்த வருடத்தில் 3 ஆம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு தடவையும் 1000 பயனாளிகள் நன்மையடைந்து வருகின்றார்கள். இதன்படி தலா 10 சீமெந்துப் பைக்கற்கள் வீதம் 1000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இவ்வருடமும் 3 ஆவது தடவையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X