2025 ஜூலை 17, வியாழக்கிழமை

செம்மணியில் குப்பை கொட்டினால் 1000 ரூபாய் அபராதம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

செம்மணி வீதியின் இருமருங்கிலும் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. அங்கு தற்போது விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.

தொடர்ந்து குப்பை கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியன அறிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X